Duration 19:23

எம்ஜிஆருடன் ஜெயலலிதாவை இணைத்து வைத்த ஜானகி அம்மாள்- வெளிவராத ரகசியம்

2 001 watched
0
12
Published 4 Sep 2021

Janaki Ammal who linked Jayalalithaa with MGR - an undisclosed secret. In this ValaiMedai Programme, Reporter Bala Bharathi speaks about How Actress and Politician Jayalalithaa came in to cinema field. Who is reason behind this incident. Watch it now to know the secret. #MGR #Jayalalithaa #Thalaivi #AIADMK #rojatamiltv #JayalalithaFirstMovie #MGRMovies #MgrJayalalitha #AayirathilOruvanMovie #DirectorBrbandalu #BRBandalu #JayalalithaMovies #KarnanMovie #KannanEnKadhalanMovie #SivajiGanesan #JaiShankar #SivajiMovies #RojaTamilTv #ValaiMedai #RojaTamilTvVideo எம்.ஜி.ஆருக்கு விருப்பமே இல்லாமல் அவருக்கு ஜோடியாக நடித்த ஜெயலலிதா! கடனில் தத்தளித்த தயாரிப்பாளரை கரையேற்றிய எம்.ஜி.ஆர்! எம்.ஜி.ஆருக்கு ‘தேவர் பிலிம்ஸ்’சின்னப்பா தேவர் மாதிரி, சிவாஜிக்கு ‘பத்மினி பிலிம்ஸ்’ பி.ஆர்.பந்துலு! சிவாஜியை வைத்து பந்துலு எடுத்த சில படங்கள் தரமாக இருந்தாலும் அவை, வர்த்தக ரீதியிலான வசூலைத் தரமுடியாமல் நஷ்டத்தில் தள்ளியது! இந்த இக்கட்டான சூழ்நிலையில் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தாராம் சிவாஜி!‘முரடன் முத்து’வின் போது இந்த பிரச்சனை பெரிய அளவில் வெடித்தது! இந்த நஷ்டத்திலிருந்து மீண்டு வரவும்; சிவாஜியின் கடனை அடைப்பதற்காகவும் ஒரு புதிய படத்தைத் துவங்க நினைத்தார் பந்துலு! கடல் பகுதியில் அடிக்கடி நடைபெறும் கப்பல் கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆங்கில நாவலை தழுவி ஒரு கதையை உருவாக்கினார். அந்தப் படம்தான் ‘ஆயிரத்தில் ஒருவன்’. கடன் சுமை அழுத்த; மனம் நொந்து போன நிலையில் எம்.ஜி.ஆரை நம்பி வந்த பந்துலு, தன் வாழ்க்கையை பணயமாக வைத்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை ஆரம்பித்தார்! படம் அசுரத்தனமான வெற்றியைப் பெற்றது. வசூலில்‘ரெக்கார்டு பிரேக்’கை ஏற்படுத்தியது. இதில் வந்த லாபத்தை வைத்து பழைய கடன்களையெல்லாம் அடைத்து; சிரமத்திலிருந்து மீண்டார் பந்துலு. கதாபாத்திரத்தின் கம்பீரத்துக்குப் பொருத்தமான கதாநாயகனாக எம்.ஜி.ஆர் இருந்தார்! லட்சியம், வீரம், காதல், சாகசம் என்று எல்லாக் கோணங்களிலும் எழுச்சி நாயகனாக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர் ரசிகர்களை ரொம்பவும் திருப்தி செய்த படங்களின் பட்டியலில் முக்கியமான படமாக இது இருந்தது! ஜெயலலிதா, எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்த முதல் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’தான்! எம்.ஜி.ஆருக்கு விருப்பமே இல்லாமல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஜெயலலிதா, பிறகு எம்.ஜி.ஆரின் ‘ஆஸ்தான நாயகி’மாறிய ஜெயலலிதா, ‘ஆயிரத்தில் ஒருவன்’படம் தொடங்கி ‘பட்டிக் காட்டு பொன்னையா’வரை 28 படங்களில் எம்.ஜிஆருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். [04/09, 11:26 am] Balabarathi jour: Description: எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ‘கண்ணன் என் காதலன்’ படம் முக்கோணக் காதலை மையமாகக் கொண்ட கதை. இதில் ஜெயலலிதா, வாணிஸ்ரீ இருவரும் நாயகிகளாக நடித்திருந்தனர். எம்.ஜி.ஆர், வாணிஸ்ரீ நடுவே காதல் உருவாகியிருக்கும். ஆனால், எம்.ஜி.ஆரை ஒருதலையாய் காதலிப்பார் ஜெயலலிதா. விபத்தில் கால்கள் ஊனமுற்ற ஜெயலலிதாவிடம் அன்பாகப் பழகுவதை வைத்து அவரின் அனுதாபத்தைப் பெற முயற்சி செய்வார் ஜெயலலிதா. இதில் இன்னொரு நாயகி இருந்தாலும், ஜெயலலிதா மீதுதான் கதை இருந்தது. கால்கள் ஊனமான பெண்ணாக வரும் அவர், தனது ஆசாபாசங்கள், காதல், சோகம்... என எல்லா விதமான உணர்வுகளையும் சக்கர நாற்காலியில் இருந்தபடியே அழகாகப் பிரதிபலிப்பார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவையான சம்பவம்... ஒருநாள், அதிகாலை நேரத்திலேயே படப்பிடிப்புக்கு வந்து, தனது காட்சியில் நடித்து முடித்த பின் மதியம் வீட்டுக்கு கிளம்புவதற்காக காரில் ஏறினார் எம்.ஜி.ஆர். அவரை வழியனுப்புவதற்காக வந்த இயக்குநரிடம், "அடுத்து என்ன சீன் எடுக்கப்போறீங்க?" என கேசுவலாக கேட்க, ‘‘சக்கர நாற்காலியில் இருந்து மாடிப் படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி”என்றார் இயக்குநர். அப்போது, பதட்டத்துடன் காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர், ‘‘அது ரொம்ப ரிஸ்க்கான சீன் ஆச்சே. அந்தப் பொண்ணு (ஜெயலலிதா) விழுந்துட்டா என்ன ஆகறது?, நானும் கூட இருக்கேன்’’ என்றபடி பரபரப்பாக செட்டுக்குள் நுழைந்தார். இதுபோன்ற ரிஸ்க்கான காட்சிகளில் 'டூப்' போட்டு எடுப்பது வழக்கம்! ஆனால், படியின் விளிம்பு வரை ஜெயலலிதா தடுமாறி வருவதைப் போல் கேமராவில் படம் பிடித்தாக வேண்டும். அப்போது அவர், ஒரு அங்குலம் நகர்ந்தாலும் கீழே விழக்கூடிய ஆபத்து உள்ளதென எம்.ஜி.ஆர் அறிந்தார். ஆகவே, படியின் ஒரத்தை சரியாக அளந்து, நாற்காலி முன்னோக்கி நகராதபடி சக்கரத்தில் கயிற்றை இழுத்துக் கட்டச் சொன்ன எம்.ஜி.ஆர், கயிறு வலுவாக உள்ளதா என பலமுறை இழுத்துப் பார்த்தோடு, அதில் அவரே அமர்ந்து, படி வரை நகர்ந்து சென்று பரிசோதித்தார். இப்படி பலமுறை ஒத்திகை பார்த்த பின்னரே ஜெயலலிதாவை நடிக்க சம்மதித்தார். அதன் பிறகே அந்தக் காட்சி படமாக்கப்பட்டது.

Category

Show more

Comments - 3